ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடர் – இலங்கை அணி வெற்றி!
Sunday, September 11th, 2022
ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை அணி 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
67க்கு 43 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணியை இலங்கை அணி வீழ்த்தியது.
இதற்கிடையில், மற்றைய அரையிறுதி போட்டியில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் மலேசியவை வீழ்த்திய சிங்கப்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்ற இலங்கை அணி 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் வெற்றியாளரானது.
அதேநேரம், தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக மகளிர் வலைப்பந்து தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
000
Related posts:
|
|
|


