கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு?

Sunday, June 5th, 2016

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிகெட் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.

இலண்டனிலுள்ள லார்ட்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, இந்த விளையாட்டின் விதிகள் பற்றிய ஒட்டு மொத்த பொறுப்பையும் கொண்டிருக்கும் மார்லிபோன் கிரிக்கெட் கிளப் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டுமென தான் விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றிய கட்டுபாடுகள் இருந்தாலும், அதனுடைய ஆழம் (தடிமன்) பற்றி கட்டுபாடுகள் எதுவும் இல்லை.

கிரிக்கெட் விளையாட்டில் ஓட்டங்களை எடுப்பதையும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிப்பதையும் மட்டையின் சில ‘ஸ்வீட் ஸ்பாட்ஸ்’ எனப்படும் தோதான வகையில் வடிவமைக்கப்பட்ட சில பகுதிகள் எளிதாக்குகின்றன.

பந்தை அடிப்பதற்கு திறன்மிக்க இந்த ஸ்வீட் ஸ்போட்ஸ் பகுதியை மட்டையிலே பரந்த அளவில் உருவாக்க அதனை தயாரிப்போர் அதிக திறனாளிகளாக மாறியுள்ளனர் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய கிரிக்கெட் மட்டை ஆட்டக்காராகள் மிக எளிதாக ஓட்டங்களை குவிக்கின்றனர் என்று சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு முன்னாள் ஆட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்

160316152052_cricket_bat_640x360_bbc_nocredit

150420145501_cricket_bat_and_ball_640x360_afp

Related posts: