நியூசிலாந்து அணி வெற்றி !

Thursday, February 6th, 2020

இந்திய அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் ஹமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 347 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 103 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிம் சவ்தி 2 விக்கட்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 348 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து தமது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் ரோஸ் டெய்லர் 109 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார். பந்துவீச்சல் இந்திய அணியின் குல்திப் யாதவ் 2 விக்கட்களையும் வீழ்த்தினார்.

Related posts: