ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோனார் குணரத்ன

Tuesday, February 21st, 2017

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டார்டெவில்ஸ் அணியால் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோன்று அவுஸ்திரேலியாவுடனான டி20 தொடரில் சோபித்து வரும் சகலதுறை வீரர் அசேல குணரத்னவும் ஐ.பி.எல்லில் ஏலம்போயுள்ளார்.

பெங்களுருவில் நேற்று இடம்பெற்ற ஏலத்தில் மத்தியூஸின் அடிப்படை விலையாக இந்திய நாணயப்படி 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் டெல்லி அணி அதே விலை கொடுத்து அவரை வாங்கி உள்ளது. மத்தியூஸ் இதற்கு முன்னரும் டெல்லி அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடியுள்ளார்.

எனினும் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மத்தியூஸ் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு தொடரின் ஆரம்ப போட்டிகளில் அவருக்கு விளையாட முடியாத நிலை உள்ளது. அவர் பங்களாதேஷுக்கு எதிரான சொந்த நாட்டில் விளையாட வேண்டி இருப்பதோடு ஐ.பி.எல்லின் 14 போட்டிகளில் 8இல் பங்கேற்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டி வரும் அசேல குணரத்னவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் வாங்கியுள்ளது. இந்திய நாணயத்தில் அவர் 30 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சியாளரான மஹேல ஜயவர்தனவே குணரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார். குணரத்ன ஐ.பி.எல் ஏலத்திற்கு முந்தைய தினம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக 84 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்திய பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில், அதிகத் தொகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.

பெங்களுருவில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் இரண்டு மில்லியன் டொலருக்கு அதிகமாக (சுமார் 13.5 கோடி இந்திய ரூபாய்கள்) ‘ரைசிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ்’ கிரிக்கெட் அணியால் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னால், 2014 ஆம் ஆண்டு, 1.3 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனின் வரலாற்று பதிவை இதன் மூலம் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

உலகில் அதிக லாபம் கிடைக்கின்ற கிரிக்கெட் போட்டியாக ஐ.பி.எல் விளங்குகிறது.

உலகின் முன்னிலை கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்ற 10ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்போது நடைபெற்ற, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டி பிரிவுகளிலும், இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

ஆனால், இங்கிலாந்தின் பல விளையாட்டு வீரர்கள், இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு, புதிய திறமையான வீரர்களை தேடி கொண்டிருந்த ஐ.பி.எல் அணி உரிமையாளர்களின் கவனத்தையும் பெற்றனர்.

இதில் புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ”ரைசிங் பூனே சுப்பர் ஜயன்ட்ஸ்’ அணியானது, இங்கிலாந்து சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸை ஏலம் எடுப்பதற்கு முன்னர், கடும் போட்டி நிலவியது, அவருடைய அணியின் சக வீரர் டைமால் மில்ஸ், இந்திய கிரிக்கெட் அணி தலைவர் வீராட் கோலியின் தலைமையிலான பெங்களுரு ரோயல் சலஞ்சர்ஸ் அணியால் 1.8 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டார்.

இது அவருடைய அடிப்படை விலையை விட 10 மடங்கு அதிகமாகும். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது நபியை 45 ஆயிரம் டொலருக்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளதால், அந்த நாட்டில் இருந்து இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முதல் கிரிக்கெட் வீரராக இவர் மாறியுள்ளார்

coltkn-02-21-fr-50163228361_5236780_20022017_MSS_CMY

Related posts: