சாதனை வெற்றியை பெற்றுக்கொண்டது இலங்கை!

Tuesday, July 18th, 2017

சிம்பாப்வே இலங்கை அணிகளுக்க இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை சாதனை வெற்றியுடன் பதிவுசெய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியானது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாவது இன்னிஸ்ஸிற்காக துடுப்பெடுத்தாடி இலக்கொன்றை துரத்தியடித்து வெற்றிபெற்ற அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸிற்காக 356 ஓட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிரேக் எர்வின் 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிஇ 346 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக தரங்க 71 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கீறிமர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 10 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக 377 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்டச ஓட்டமாக சிக்கந்தர் ராசா 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

388 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி இன்றைய போட்டியின் இறுதிநாளில் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. சிம்பாப்வே அணியிடம் ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு டெஸ்ட் வெற்றியின் மூலம் இலங்கை அணி பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: