ஆசிய அஞ்சலோட்ட செம்பியன்ஷிப் – 4 x 400 மீற்றர் ஆடவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணிக்கு தங்கம்!

Wednesday, May 22nd, 2024

 

தாய்லாந்தின் பேங்கொக்கில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டிற்கான ஆசிய அஞ்சலோட்ட செம்பியன்ஷிப் போட்டியில் 4 x 400 மீற்றர் ஆடவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

குறித்த போட்டி இலக்கை 3 நிமிடங்கள் 4.48 செக்கன்களில் நிறைவுசெய்து இலங்கை ஆடவர் அணி இவ்வாறு தங்கம் வென்றுள்ளது.

தங்கம் வென்ற இலங்கை தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, பசிந்து லக்ஷான் கொடிகார, தினூக்க தேஷான், காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றனர்.

எவ்வாறாயினும், நேரடி ஒலிம்பிக் தகுதிக்கான அடைவு மட்டத்தை இலங்கை அணி தவறவிட்டமை ஏமாற்றம் அளிக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: