அசேல குணவர்தன தொடர்பில் இன்று தீர்மானம்!

காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமான டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்கு உள்ளான அசேல குணவர்தனவிற்கு ஒரு மாதம் அளவில் விளையாட முடியாது என அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.இதனால் இந்திய அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவரால் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா அணியுடன் இன்று இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது அவரின் கையில் காயம் ஏற்பட்டது.தடுத்தாடிய பந்தோன்றை பிடிக்க முற்பட்ட போது அவரின் கையில் பந்து தாக்கிய நிலையில், இந்த உபாதை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டில்ஷான் வெளியிடும் உண்மைகள்: தடுமாறும் விளையாட்டுத் துறை!
இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!
|
|