உலகின் மிக நீளமான கால்தடங்களின் மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது

Saturday, November 18th, 2017

கடந்த 2009ம் ஆண்டில் டைனோசர் ஒன்றின் உலகின் மிகப்பெரிய கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பிரெஞ்ச் நாட்டின் Plagne எனும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இக் கால் தடங்கள் சுமார் 150 மீற்றர் நீளமானதாகக் காணப்பட்டது.

இக் கால் தடங்கள் தொடர்பில் 2010 மற்றும் 2012ம் ஆண்டு காலப் பகுதியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.இதன் அடிப்படையில் தற்போது குறித்த கால் தடங்களுக்குரிய டைனோசரின் இயல்புகள் சிலவற்றினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி குறித்த டைனோசர் 150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தாக தெரிவித்துள்ளனர்.தவிர டைனோசரின் நீளம் 35 மீற்றர்கள் வரை இருந்திருக்கலாம் எனவும், எடையானது 35 தொன்கள் வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: