ஆஸியின் தலைமை பயிற்றுவிப்பாளராக லெஹ்மன்  2019 வரை நீடிப்பு!

Wednesday, August 3rd, 2016

அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்   டெரன் லெஹ்மன் குறித்த பதவியில் 2019 ஆண்டுவரை நீடிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் உலகக்கிண்ணம் மற்றும் ஏஷஸ் தொடருக்கும் டெரன் லெஹ்மன் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. 46 வயதான டெரன் லெஹ்மன் 2013 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

அவுஸ்திரேலிய அணி 2013 ஆண்டு ஏஷஸ் தொடரை 3-0 என்ற நிலையில் இழந்திருந்ததன்  பின்னர் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய டெரன் லெஹ்மன் அவுஸ்திரேலிய அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். இவரின் வருகைக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து நியுஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் மோதி தொடரை வென்றுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி  தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: