சீன பகிரங்க டென்னிஸ் : வெளியேறினார் ஷரபோவா!
Friday, October 6th, 2017
சீன பகிரங்க டென்னிஸ் தொடரில், இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை எதிர்கொண்ட, ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, 2-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான, லத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில், அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை வென்று, இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டிக்குச் சென்றார்.
Related posts:
மகளிர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து!
தண்டனை சரியானது - பங்களாதேஷ் கிரிக்கெட் சபை!
தேர்தலில் போட்டியிடுவதில்லை – திலங்க!
|
|
|


