நாளை ஆரம்பமாகும் கிரிக்கெற் சம்பியன் கிண்ண தொடர்!

Wednesday, May 31st, 2017

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கை அணி மலிங்கவின் பந்து வீச்சை நம்பியிருக்கிறது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை 1-ம் திகதி தொடங்குகிறது. இதில் இடம்பிடித்துள்ள 8 அணிகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை அணி ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் தென்ஆபிரிக்கா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன. இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி சமீப காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

சிம்பாப்வே, மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றாலும், இங்கிலாந்து மற்றும் தென்ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடரை இழந்திருந்தது.

இளம் வீரர்களை கொண்டு சம்பியன்ஸ் கிண்ணத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்த இலங்கை கிரிக்கெட் மலிங்க மற்றும் காயத்தில் இருந்து மீண்ட மெத்யூஸ் ஆகியோரை இலங்கை அணியில் சேர்த்துள்ளது.

மலிங்க கடந்த 18 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டது கிடையாது. தற்போது இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

அவர் டி20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இதனால் 10 ஓவர்கள் வீசக்கூடிய அளவிற்கு உடற்தகுதி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் சம்பியன்ஸ் கிண்ண தொடர் 10 ஓவர்கள் வீசி, தனது மெஜிக் பந்தின் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியை தேடித்தருவார் என்று இலங்கை கிரிக்கெட் நம்புகிறது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால கூறுகையில் ‘‘மலிங்கவின் உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் 10 ஓவர்கள் பந்து வீசுவார் என்று நம்புகிறோம்’’ என்றார்.

மலிங்க 10 ஓவர்கள் வீசினால் அது இலங்கை அணிக்கு மிகக்பெரிய உதவியாக இருக்கும். மலிங்கவைத் தவிர சுரங்க லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகர, திசர பெரேரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

Related posts: