டில்ஷான் வெளியிடும் உண்மைகள்:  தடுமாறும் விளையாட்டுத் துறை!

Friday, September 9th, 2016

தில­க­ரத்ன டில்ஷான் கருத்­துக்­களை வெளியி­டு­வதும் வெளியிடாமலி­ருப்­பதும் அவ­ரு­டைய விருப்பம். அதில் அமைச்­ச­ரான நான் தலை­யிட முடியாது. அதனால் ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்பட்டால் நான் கவனம் செலுத்­துவேன் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜயசேகர ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக தயா­சிறி ஜய­சே­கர பத­வி­யேற்று ஒரு­வ­ருட பூர்த்­தியை முன்னிட்டு வீர­கே­சரி விளை­யாட்டுப் பிரி­வுக்கு பிரத்­தி­யேக பேட்டி ஒன்றை வழங்­கி­யி­ருந்தார். அந்தப் பேட்­டி­யின்­போது, டில்ஷான் தனக்கு நேர்ந்த அவ­லங்­களை வெளி­யி­டப்­போ­கி­றா­ராமே என்று அவ­ரிடம் கேட்­ட­தற்கு,

கிரிக்கெட் அணிக்குள் நிறைய பிரச்­சினைகள் இருக்­கி­றன. கிரிக்­கெட்டில்மட்­டு­மல்ல எது­வாக இருந்­தாலும் அது அணி­யாக இருந்தால் அதற்குள் ஏதா­வது சிறு சிறு பிரச்­சி­னைகள் இருக்கும். அந்தப் பிரச்­சி­னை­களை அப்போது அவர்­களால் வெளியில் சொல்ல முடி­யாது.

தற்­போது அவர் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெறு­கிறார். அதனால் அவ­ருக்கு ஏற்­பட்ட அனுபவங்களை அவர் வெளியில் சொல்ல முனை­யலாம். அது அவ­ரு­டைய விருப்பம். அதில் நான் ஒன்றும் செய்ய முடி­யாது. தனிப்­பட்ட பிரச்­சி­னை­களில் அமைச்­ச­ரான நான் தலை­யிட முடியாது. தலை­யி­டவும் மாட்டேன். யாரையும் காப்பாற்ற வேண்­டிய அவ­சி­யமும் எனக்­கில்லை. டில்­ஷானும் சரி சனத் ஜய­சூ­ரி­யவும் சரி யாராக இருந்­தாலும் எனக்கு ஒன்றுதான் என்று அமைச்சர் பதலளித்தார்.

news_25-08-2016_51dilsan

Related posts: