புதிய சிலந்தி இனம் கண்டுபிடிப்பு!

Wednesday, April 19th, 2017

சிலந்திகள் பொதுவாக அதிக விஷம் கொண்டவை. இவை தமது விஷத்தின் மூலம் இரையைக் கொன்றே உணவாக உட்கொள்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

அதேவேளை இச் சிலந்திகளில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை வாழும் பிரதேசங்களுக்கு ஏற்ப அளவிலும், விஷத்தின் தன்மையிலும் வேறுபாடு கொண்டன.

இப்படியிருக்கையில் மேலும் ஐம்பதிற்கும் அதிகமான புதிய இன சிலந்தி வகைகளை அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள ஹேப் ஜோர்க் தீபகற்பத்தில் இரண்டு வாரங்களாக மேற்கொண்ட ஆய்விலேயே இப் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் மட்டும் 15,000 சிலந்தி இனங்கள் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது இதுவரை உலகளவில் 1,200 வகையான சிலந்தி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: