ஐபோன் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

Thursday, December 8th, 2016
தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் வெடிப்பு சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் சாம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

இதேவேளை ஐபோன் பாவனையாளர்களுக்கு மற்றுமோர் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐபோன்களுடன் தரப்படும் ஒரிஜினல் சார்ஜர்கள் தவிர்ந்த ஏனைய போலி சார்ஜர்களை பயன்படுத்த வேண்டாம் என்பதே அதுவாகும்.

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 99 சதவீதமான போலி சார்ஜர்கள் சிறந்தவை அல்ல எனவும் இவை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

400 சார்ஜர்கள் இந்த ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போலி சார்ஜர்கள் அனைத்தும் ஐபோன்களுக்கானது என ஒன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும்.

மேலும் இந்த சார்ஜர்கள் அமெரிக்கா, கனடா, கொலம்பியா, சீனா, தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற 8 நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)

Related posts: