எலி பிடித்தால் சன்மானம் – இந்தோனேஷியா!

Thursday, October 20th, 2016

உலகில் மாசடைந்த மற்றும் அதிக சனநெரிசல் கொண்ட நகரங்களில் ஒன்றான இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் எலி பிடிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சன்மானம் வழங்க உள்ளதாக நகர நிர்வாகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஓர் எலிக்கும் 1.50 டொலர் (215 ரூபாய்) வீதம் வழங்கப்படும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.நகரில் இருந்து எலிகளை ஒழிக்கும் திட்டம் சுமார் 10 மில்லியன் மக்கள் வாழும் நகரை சுத்தமாக்க உதவும் என்று நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஜகார்த்தாவின் குப்பை நிறைந்த வீதிகள் மற்றும் சேரிப் பகுதிகள் அங்கு பெரும் எண்ணிக்கையிலான தீய விலங்குகள் இருப்பதற்கு காரணமாக உள்ளது.பிடிக்கப்படும் எலிகள் உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்குவதன் முலம் அவர்கள் சன்மானம் அளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் காலனித்துவ ஆட்சியின்போது வியட்நாம் தலைநகரில் கொண்டுவரப்பட்ட இவ்வாறானதொரு திட்டம் மோசமான விளைவை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அப்போது, எலி பிடிப்பவர்கள் அதற்கான ஆதரமாக எலியின் வாலை உள்ளூர் நிர்வாகம் கோரியபோது பெரும்பாலானோர், எலியின் வாலை மாத்திரம் வெட்டிவிட்டு எலிகளை உயிருடன் விட்டு வைத்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

 coltkn-10-20-fr-07154544948_4890212_19102016_mss_cmy

Related posts: