நவீன தொழிநுட்பத் திறன் கொண்ட தட்டுக்கள் கண்டறிவு புற்றுநோய்க் கலங்களைத் தாக்கி அழிக்கின்றது!

Monday, January 9th, 2017

புற்றுநோய்க் கலங்களை தாக்கி அழிக்கும் விணைத்திறன் கொண்டு அமைந்த நவீன தொழில்நுட்பத்ததைக் கொண்ட நெனோ தட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சிக்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான ஆராய்ச்சி நடவடிக்கையிலேயே இந்த நெனோ தட்டுக்கள் உருவாக்கம் பெற்றுள்ளன. 10 நெனோ  மீற்றர்கள் வரையிலான அளவுடைய இந்தத் தட்டுக்கள் புற்றுநோய்க் கலங்களை தாக்கி அழிக்கும் வல்லமையை கொண்டமைந்துள்ளன.

அவை நோய் எதிர்ப்பு அமைப்பின் ரி. வகைக் கலங்களுடன் இணைந்த புற்றுநோய்க் கலங்கைச் சென்றடைகின்றன. உடல் கலங்களுள் செலுத்தப்பட்டு 10 நாட்களில் கால வரையினுள் புற்றுநோய்க்கலங்களை அவை முற்றாக அழித்து விடுகின்றன. என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையிலே உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் மட்டும் 14.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது அத்துடன் ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் வரையானவர்கள் புற்றுநோய்யின் தாக்கத்துக்கும் பாதிப்புக்கும் உள்ளாகி வருவதாக தகவல்களும் புள்ளி விவரங்களும் ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ThinkstockPhotos-173710735-1080x675-e1481255882512

Related posts: