மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கணனி தொழில்நுட்பம் !

Friday, April 1st, 2016
மனிதர்களின் மனநிலையை, உணர்வுகளை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ப பேசும் வகையில், கணனி தொழில்நுட்பம் வளர்ச்சி பெறும்,” என, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்தள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சத்ய நாதெள்ளா, உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த, நிறுவனத்தின் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில், அவர் பேசியதாவது- தற்போது பேசும் தொலைபேசி, ‘ஆப்’ கணனி மென்பொருள் உள்ளன. ஆனால், மனிதனின் பேசும் திறமையை கணனிகளில் புகுத்த வேண்டுமானால், முதலில் கணனிகளுக்குள் புத்திசாலிதனத்தை புகுத்த வேண்டும்.மனிதர்களா, இயந்திரமா என்ற போட்டி இல்லாமல், மனிதர்களுடன் இணைந்து, அவர்களுடைய உணர்வுகளை, மனநிலையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் பேசும் திறனுடையதாக, ஒரு நண்பனாக கணனிகளை உருவாக்க வேண்டும்.மனிதர்களுக்கு உள்ள முடிவெடுக்கும் திறன், புதிய சிந்தனைகள் உள்ளிட்டவற்றை புகுத்த வேண்டும். இது, வெகுவிரைவில் சாத்தியமாகும், என்றார்.’கார்டனா’
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள, பார்க்கும், கேட்கும், பேசும், உரையாடும், ‘கார்டனா’, எனப்படும் மென்பொருளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இது, ஒரு டிஜிட்டல் உதவியாளராக செயல்படும் மென்பொருளாகும்

Related posts: