பாவனைக்கு வருகின்றது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்!

Tuesday, October 17th, 2017

பெட்ரோலிய எரிபொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைதலை தடுக்க மாற்று எரிபொருளினை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக நீர் மற்றும் ஹைட்ரஜன் என்பவற்றினை எரிபொருளாக பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்ட வாகனங்கள் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதத்திலிருந்து இவ் எரிபொருளில் இயங்கக்கூடிய ட்ரக் வண்டிகள் லாஸ் ஏஞ்சல் நகரில் சேவையை ஆரம்பிக்க தயாராகிவருகின்றன. இந்த ட்ரக் வண்டிகளை ஜப்பானின் டெயோட்டா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இவ் வாகனங்களைப் பயன்படுத்தி ஆரம்பகட்டமாக தினமும் 322 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை பரிசோதனையின்போது இந்த ட்ரக் வண்டிகள் 36287 கிலோ கிராம் எடையை சுமந்துகொண்டு 6437 கிலோ மீற்றர்கள் தூரம் வரை பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: