தடுமாறும் ஆப்பிள் நிறுவனம்!

Friday, October 21st, 2016

கைப்பேசிகள், கணணிகள், மடிக்கணனிகள், ஐபேட், ஐபொட் என பல சாதனங்களை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுனம் கார் வடிவமைப்பிலும் காலடி பதித்தது.

வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இத் திட்டம் திடீரென கைவிடப்படுவதாக அந் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதற்கு பிரதான காரணமாக குறித்த திட்டத்தில் பணிபுரிந்துவந்த பல பொறியியலாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் இக் கார் வடிவமைப்பு திட்டம் ஆரம்பித்துள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இவ் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமே கடந்துள்ள நிலையில் மீண்டும் கைவிடப்படவுள்ளதாக பிரபல இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இத் திட்டத்தினை கைவிட்ட பின்னர் ஆப்பிள் நிறுவனமானது கார்களுக்கான மென்பொருள் வடிவமைப்பில் முழுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறெனினும் எதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பின்வரும் இருவகையான முடிவுகளுள் ஒன்றினை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவற்றுள் ஒன்று வேறு ஒரு கார் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து தனது Apple Car வடிவமைப்பு திட்டத்தினை முன்னெடுத்தல் அல்லது மேற்குறிப்பிட்டது போன்று மென்பொருள் வடிவமைப்பில் கவனம் செலுத்துதல் ஆகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: