யாகூ நிறுவனத்தை கொள்ளவனவு செய்ய DMGT பேச்சு வார்த்தை!

Wednesday, April 13th, 2016
முன்னணி இணைய சேவையினை வழங்கிவரும் யாகூ நிறுவனம் அதனை விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளது. இதற்காக வெவ்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் தற்போது முன்னணி ஒன்லைன் செய்தி தளமான டெய்லி மெயிலின் தாய் நிறுவனங்களான BBC, DMGT என்பன யாகூவை கொள்வனவு செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை டெய்லி மெயிலின் தாய் நிறுவனங்களுள் ஒன்றான DMGT ஆனது Mail,Metro, Elite Daily ஆகிய ஒன்லைன் செய்தி தளங்களையும் இயக்கி வருவதுடன் இவற்றின் மூலம் வருடாந்தம் 2 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டி வருகின்றது. இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதியை இறுதி நாளாகக் கொண்டு விற்பனை முயற்சியில் ஈடுபட்டு வரும் யாகூ நிறுவனத்தையும் கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

Related posts: