பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் ஆய்வில் வெற்றி!  

Friday, August 12th, 2016

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் ஆய்வில் ஊக்கமளிக்கும் முக்கிய வெற்றி கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த 8 பேரின் நடமாட்டம் மற்றும் உணர்வுகளை மீட்டெடுக்கும் ஆராய்ச்சியில் பாதியளவு வெற்றியடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இது அறிவியல் ஆய்வில் மிக முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை உறுப்புக்களை இயக்க மூளைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மெய்நிகர் மற்றும் உணர்வூட்டும் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி அந்த நோயாளிகளுக்கு ஓராண்டாக அளிக்கப்பட்டது.

பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், அந்த நோயாளிகளிடம் ஆச்சரியப்படும் வகையில் சில மாற்றங்களைக் கண்டனர். செயற்கை உறுப்புக்களைக் கட்டுப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டு, அந்தப் பயிற்சி, நோயாளிகளின் மூளையையும் மறு இணைப்புப் பெற வைத்திருக்கிறது.

இதன் மூலம், சுயமாக இயங்கக்கூடிய சில தன்மைகளையும், உணர்வுகளையும் பெற உதவியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஒரு பெண், சுருக்கங்களை உணர முடிந்ததாகவும், அதனால் அவர் தனது குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இந்த ஆய்வு முடிவுகள், சைன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

Related posts: