Dropbox அறிமுகமாகும் அற்புதமான வசதி!

Sunday, December 11th, 2016

கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியை தரும் முன்னணி சேவை வழங்குனர்களில் Dropbox உம் ஒன்றாகும்.

Dropbox ஆனது தற்போது தனது பயனர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த வசதியானது Offline Folders என அழைக்கப்படுகின்றது.

இவ் வசதியின் ஊடாக இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் Dropbox இலிருந்து தரவுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் Dropbox Pro, Business, மற்றும் Enterprise போன்ற கணக்குகளை வைத்திருப்பவர்கள் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இவ் வசதியானது இணைய உலாவிகளின் ஊடாக மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

எதிர்வரும் சில நாட்களில் அன்ரோயிட் சாதனங்களுக்கான Dropbox அப்பிளிக்கேஷனிலும், அதனைத் தொடர்ந்து விரைவில் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனிலும் கிடைக்கப்பெறும்

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)

Related posts: