ஜுராசிக் காலத்தில் வாழ்ந்து இராட்சத கடல்வாழ் உயிரினத்தின் சுவடு கண்டுபிடிப்பு!

Thursday, November 2nd, 2017

ஏறத்தாழ 150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் இராட்சத கடல் வாழ் உயிரினம் ஒன்றின் சுவடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுமார் ஐந்து மீற்றர்கள் நீளமான இந்த சுவடு இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் சுவடுகளில் இதுவே பழமைவாய்ந்ததாகக் காணப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்கள் PLOS ONE எனும் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்ற இராட்சத உயிரினங்களின் சுவடுகள் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று டைனோசர் காலத்தில் வாழ்ந்த முதுகெலும்புள்ள விலங்குகள் தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோதே இந்த சுவடு கிடைத்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: