உலகின் முதல் பிரமிடு கண்டுபிடிப்பு!

Monday, August 29th, 2016

பிரமிடு என்றாலே எகிப்து நாடுதான் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் முதல் பிரமிடு கட்டப்பட்டது கஜகஸ்தான் நாட்டில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை எகிப்தின் ‘டிஸோசர்’ பிரமிடுதான் உலகின் முதல் பிரமிடு என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் எகிப்தின் கெய்ரோவில் இருந்து 3,900 மைல்கள் வடகிழக் கில் கஜகஸ்தானின் சார்யார்கே பகுதியில் ஒரு பழமையான பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரமிடு எகிப்தில் அமைந்துள்ள ‘டிஸோசர்’ பிரமிடை விட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன், குறிப்பிட்ட பிரமிடா னது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரமிடு குறித்த உறுதியான தகவல்களை கடந்த ஆண்டே தொகுத்துவிட்ட ஆய்வாளர்கள், அவற்றை மிகவும் ரகசியமாக பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது வெறும் கற்குவியலாக காட்சி தரும் இந்த பிரமிடின் தோற்றமும், இதுவரை உலகின் முதல் பிரமிடாகக் கருதப்பட்ட எகிப்தின் ‘டிஸோசர்’ பிரமிடு போலவே உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிதாய் கண்டுபிடித்துள்ள பிரமிடு பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இந்த பிரமிடானது 27 அடுக்குகளுடன் இருந்திருக்கலாம் என்று ஊகமாகக் கூறியுள்ளனர். இதில், ஐந்து நிலைகள் வரை கற்களால் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. ‘டிஸோசர்’ பிரமிடு, கி.மு. 2700–ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: