அறிமுகமாகிறது தானாக இயங்கும் ஷூ!

Friday, March 25th, 2016
ஷூ தயாரிக்கும் பிரபல நிறுவனமான நைக்கி, தானாக இயங்கக்கூடிய ஷூக்களை உருவாக்கியிருக்கின்றது.
1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றுவிட்டது.
நைக்கி ஹைபர் அடாப்ட் 1.0 (Nike Hyperadapt 1.0)என்ற ஷூக்களை வாங்கி, கால்களை நுழைத்தால் தானாகவே இறுகிக்கொள்ளும். அதைத் தளர்த்த வேண்டும் என்றால் ஷூக்களின் பக்கவாட்டில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் போதும். 2 நொடிகளில் தளர்த்திவிடும், காலை வெளியில் எடுத்துவிடலாம்.
ஷூ வாங்கி 2 வாரங்கள் வரை இப்படி பொத்தானை அழுத்தும் வேலை இருக்கும். பிறகு ஷூ தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும்.
பெட்டரியில் இந்த ஷூ இயங்குகிறது. 2 வாரங்களுக்கு ஒருமுறை பெட்டரியைச் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.
இது ஆரம்ப முயற்சி தான், இன்னும் ஷூக்களில் பல புதுமைகளைச் செய்ய இருக்கிறோம் என்கிறார்கள் நைக்கி நிறுவன உரிமையாளர்கள்.
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஷூக்கள், பல வண்ணங்களில் கிடைக்கும்.

Related posts: