நச்சுக் கழிவுகளுக்கு அதிக எதிர்ப்புடைய அரிய வகை மீனினம் கண்டுபிடிப்பு!

Monday, December 12th, 2016

ஒவ்வொரு உயிரினங்களும் நச்சு கழிவுகளுக்கு எதிர்ப்பை காட்டும் இயல்பினை குறிப்பிட்ட அளவு கொண்டுள்ளன.

அந்த எல்லை மீறப்படும்போதே நோய்த்தாக்கங்களும், உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. இவை நீரில் வாழக்கூடிய மீன்களுக்கும் விதிவிலக்கு அல்ல.

இப்படியிருக்கையில் சாதாரண மீன்களை விடவும் சுமார் 8,000 மடங்குகளிற்கு மேல் நச்சு கழிவுகளுக்கு எதிர்ப்பை காட்டக்கூடிய அரிய வகை மீனினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீனினமானது அமெரிக்காவின் கிழக்கு கற்கரையில் வசித்து வருகின்றது.

இதனை கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர் Andrew Whitehead தலைமையிலான குழு கடுமையாக மாசுபட்டிருந்த குறித்த கடற்கரையிலிருந்து சுமார் 400 வரையான மீன்களை சேகரித்துள்ளனர்.

இவற்றினை ஏனைய நீர் நிலைகளிலும் வளர்ப்பதன் ஊடாக நச்சுக் கழிவுகளை வெகுவாக குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: