விண்ணில் அதிக குப்பைகளை கொண்ட நாடுகள்!

Sunday, October 22nd, 2017

விண்வெளி ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்து அண்டவெளியில் அதிகளவு குப்பைகள் தேங்கி வருகின்றன.

இவ்வாறு குப்பைகள் தேங்குவதனால் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்தும் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த குப்பைகளை அகற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் எந்த நாடுகள் விண்வெளியில் அதிகளவு குப்பைகளைக் கொண்டுள்ளன என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நாடுகளின் வரிசையில் முதலாவதாக ரஷ்யாவும், அடுத்த நிலைகளில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் என்பன காணப்படுகின்றன.இக் குப்பைகளில் தற்போது செயற்படு நிலையில் உள்ள செயற்கைக்கோள்களும் கணக்கிடப்பட்டுள்ளதுடன், ராக்கெட்டுக்களின் பாகங்கள், ஏனைய குப்பைகள் என்பனவும் அடங்குகின்றன.

Related posts: