ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் ஓர் அதிரடி சலுகை!

Monday, March 6th, 2017

பல இணைய நிறுவனங்களாலும் தரப்படும் மின்னஞ்சல் சேவைகளுள் முதன்மை வகிப்பது கூகுளில் ஜிமெயில் சேவையாகும். இதில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலகுவானதும், விரைவானதுமாக இருப்பதே முன்னணியில் திகழ்வதற்கு காரணமாகும்.

இவ்வாறிருக்கையில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மற்றுமொரு மாற்றம் ஜிமெயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சலில் இணைக்கப்படும் (Attachment) கோப்புக்களில் உச்ச பட்ச அளவு 25MB ஆக காணப்பட்டது.

இந்த அளவிற்கு மேலான கோப்புக்கள் தரவேற்றப்படும்போது சுயமகவே அழிக்கப்பட்டு விடும். இதனால் பயனர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் இப்போது இந்த அளவு 50MB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை விட அதிக அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவ் ஊடாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: