பக்டீரியாக்களின் இயல்பு தொடர்பில் புதிய தகவல் – விஞ்ஞானிகள்!

Thursday, November 2nd, 2017

பக்டீரியாக்களுக்கு மைய நரம்புத்தொகுதியோ அல்லது உணர்வுடன் கூடிய நரம்புத் தொகுதிகளோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். எனினும் பக்டீரியாக்களுக்கு பௌதிக ரீதியான தொடுகையை உணரக்கூடிய திறன் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தொடுகையானது உயிரினங்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒரு இயல்பாகும்.இதனைப் பயனப்டுத்தியே நகரும் மேற்பரப்புக்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடிவதுடன் ஆபத்துக்களையும் தவிர்க்க முடியும்.இது பக்டீரியாக்களுக்கும் விதிவிலக்கு அல்ல என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.பக்டீரியாக்கள் பிற உயிரினங்களுடன் ஒட்டியே வாழ்கின்றன.இதனால் பிற உயிரினங்களில் கலங்களுக்குள் நுழைவதற்கும் இந்த தொடுகை உணர்வு பெரிதும் உதவியாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: