பூமியை நோக்கி வரும் விண்கற்களால் சுனாமி அனர்த்தம்?

Wednesday, December 28th, 2016

பூமியை இலக்கு வைத்து 100 மீற்றர் அளவிலான சில பாரிய விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

100 மீற்றர் அளவிலான விண்கற்கள் பூமியில் மோதினால் பாரிய அளவிலான உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அவ்வாறான ஒரு விண்கல் கடலில் விழுந்தால் எதிர்பார்க்க முடியாத அளவு பெரிய சுனாமி நிலைமை ஒன்று ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இந்த கருத்துற்கு மாற்றாக மெக்சிகோவின் லொஸ் அலாமோஸ் தேசிய ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய அளவிலான விண்கல் பூமியில் மோதுவதனால் ஏற்படும் பாதிப்பை விடவும் அரை பகுதியிலான பாதிப்பே கடலில் மோதினால் ஏற்படும் என பல ஆய்வுகளின் பின்னர் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய பாரிய அளவிலான விண்கற்கள் பூமியில் விழுந்தால் அதன் மூலம் பெரிய அளவிலான சுனாமி நிலைமை ஒன்று ஏற்படாதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மெகா சுனாமியாக கருதப்படும் 100 மீற்றர் அளவிலான சுனாமி நிலைமை ஏற்படுவதனால் உயர்மட்ட நில அதிர்வு ஏற்படும். அந்த நில அதிர்வில் இருந்து வெளியாகும் சக்தி மிக பெரியவைகள் என அண்மையில் ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் விண்கல் கடலில் விழுந்தால் பாரிய சுனாமியை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வெளியாகாதென இந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.அவ்வாறு கடலில் வீழும் அல்லது மோதும் போது நீரின் அழுத்தம் அலைகளாக பிரித்து செல்லும் எனவும், அதனால் அருகில் உள்ள பகுதிகளுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் மாத்திரமே ஏற்படும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

asteroid

Related posts: