முதல் முறையாக இலங்கையில் 5G தொழில்நுட்பம்!

Monday, March 20th, 2017

5G தொழில்நுட்பம் இதுவரையிலும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கமைய தெற்காசியாவின் முதலாவது 5Gயின் புதிய மையத்தை உருவாக்குவதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து எரிக்ஸன் நிறுவனம் தெற்காசியாவின் முதலாவது 5G மையம் உருவாக்குவதற்கான ஒத்துழைப்புக்கு முன்வந்துள்ளது.

5Gயின் புதிய மையத்தினுள் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் திறமைகள் மேலும் வளர்ச்சியடையும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையை டிஜிட்டல் மற்றும் திறன் மையம் கொண்ட சமூகமாக மாற்றுவதன் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளுக்கு செல்ல முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: