விடுமுறை எடுத்த மாணவன்: தாயாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த நிர்வாகம்!

Friday, June 10th, 2016

பிரித்தானிய நாட்டில் விடுமுறையை கொண்டாடுவதற்காக பள்ளிலிருந்து மகனை அழைத்துச் சென்ற தாயார் ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் ரூ.50,000 அபாரதம் விதித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Kingswinford என்ற நகரில் டெப்பி புரவ்டுலர் என்ற தாயார் தனது இரண்டு வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அன்று எகிப்து நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்காக மகனுக்கு விடுமுறை கேட்பதற்காக Blanford Mere Primary பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளி விதிமுறைகளின் அடிப்படையில் மகனுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி அளித்தனர். ஆனால், அந்த நேரத்தில் ரஷ்ய நாட்டு விமானம் ஒன்று எகிப்து நாட்டில் சுட்டு தகர்க்கப்பட்டதால், இவர்களது சுற்றுலா திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், 4 நாட்கள் விடுமுறைக்கு பதிலாக அவர்கள் ஒரு நாள் கூடுதலாக 5 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளனர்.

பள்ளி அனுமதித்த நாட்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை எடுத்ததால், மாணவனின் தாயாரான டெப்பி புரவ்டுலருக்கு பள்ளி நிர்வாகம் 240 பவுண்ட்(50,398 இலங்கை ரூபாய்) அபாரதம் விதித்துள்ளது.

இதனை எதிர்த்து டெப்பி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, இது அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகள். இதில் ஒருநாள் கூட கூடுதலாக விடுமுறை அளிக்க முடியாது. எனவே, நீங்கள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என பதிலளித்துள்ளனர்.

Related posts: