ரைனோசொரோஸ் ரெக்ஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

Sunday, June 11th, 2017

டைனோசர்களின் இனம் எனக் கருதப்படும் ரைனோசொரோஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) தொடர்பில் Australia’s University of New England ஐ சேர்ந்து புதைபடிவ ஆய்வாளர்கள் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அவற்றின் தோல்கள் தொடர்பில் புதிய ததகவல் ஒன்றினை அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இதன்படி ரைனோசொரோஸ் ரெக்ஸ்ஸின் தோலானது செதில்களைக் கொண்டிருந்ததாகவும், அவை இறகுகளால் மூடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இத் தகவலை ஆய்வில் ஈடுபட்ட Phil R. Bell என்பவரே வெளியிட்டுள்ளார்.

இவ் விலங்கின் கற்பனை வடிவம் 1918 ஆம் ஆண்டு வெளிவந்த The Ghost of Slumber Mountain எனும் திரைப்படத்தில் முதன் முதலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுருங்கிய தோலைக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தது. அதன் பின்னர் 1960 ஆம் ஆண்டில் இது தவறான சித்தரிப்பு என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக 1993 ஆம் ஆண்டு வெளிவந்த Jurassic Park திரைப்படத்தில் ஓரளவுக்கு சரிசெய்த உருவத்தினைக் காண்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரைனோசொரோஸ் ரெக்ஸ் ஆனது 50 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினமாக கருதப்படுகின்றது.

Related posts: