செரஸ் குறுங்கோளின் அதிர்ச்சியூட்டும் படங்களை வெளியிட்டது நாசா!

Thursday, November 24th, 2016

செரஸ் குறுங்கோளில் இருக்கும் மர்மமான ஒளிரும் புள்ளிகளை தெளிவாகக் காட்டும் படங்கள் முதல்முறை வெளியாகியுள்ளன. எனினும் இந்த மர்மப் புள்ளிகளுக்கான காரணம் பற்றி ஆய்வாளர்களிடையே தொடர்ந்தும் தெளிவின்மை காணப்படுகிறது.

இந்த குறுங்கோள் எங்கும் 130க்கும் அதிகமான ஒளிரும் புள்ளிகள் காணப்படுகின்றன. இவை ஒளிர்விடும் மற்றும் மங்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. எனினும் இதற்கான காரணம் தொடர்ந்து மர்மமாக உள்ளது.

நாசாவின் டோன் விண்கலம் எடுத்திருக்கும் புதிய படங்களில், செரஸ் குறுங்கோளில் இருக்கும் பள்ளத்தாக்கின் மத்தியில் ஒளிரும் புள்ளி இருப்பதை தெளிவாக காண முடிகிறது.

செரஸ் குறுங்கோளை வலம் வரும் டோன் விண்கலம் அதன் முந்தைய சுற்றிவட்டப்பாதையில் இருந்து மாறுபட்ட சூரிய கோணத்தில் இருந்தே கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி இந்த படத்தை பிடித்துள்ளது.

எனினும் இந்த ஒளிரும் புள்ளி செரஸ் குறுங்கோளின் நிலவியல் செயற்பாடு அல்லது அதன் மேற்பரப்பில் விண்கல் விழுந்ததால் ஏற்படுவதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

கடந்த 2015 மார்ச் 6 ஆம் திகதி செரஸ் குறுங்கோளை அடைந்த டோன் விண்கலம் அதன் ஆயிரக்கணக்கான படங்கள் மற்றும் ஏனைய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடக்கது.சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள எரிகற்கள் பாதையில் செரஸ் குறுங்கோள் அமைந்துள்ளது. இது உட்புற சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒரே குறுங்கோளாகும்.960 கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த குறுங்கோள் சூரியனை வலம்வர நான்கரை ஆண்டுகள் எடுக்கின்றன.

coltkn-11-24-fr-01153649988_5042758_23112016_mss_cmy

Related posts: