போலிச் செய்திகளைத் தடுக்க பேஸ்புக் நடவடிக்கை!

Monday, November 21st, 2016

பேஸ்புக் இணைய தளத்தில் போலி செய்திகள் பிரசுரிக்கப்படுவதைத் தடுக்கும் வண்ணம் அவற்றைப் பட்டியலிடும்  புதிய வழிமுறைகளை பேஸ்புக் உருவாக்கிவருவதாக மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், அவைகளுடன் இணைந்து பேஸ்புக் பணியாற்றலாம் என்று அவர் கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர், போலி செய்திகள் வெளியிடப்படுவதாக பேஸ்புக் ஏற்கனவே விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த போலிச் செய்திகள் அதிபர் தேர்தலின் முடிவை மாற்றியிருக்கலாம் என்று சிலரால் நம்பப்படுகிறது.

_92567609_fbgetty

Related posts: