உலகின் மூத்தவர் இந்தோனேசியாவில் வாழ்கிறார்?

Friday, September 2nd, 2016

உலகின் வயதான மனிதர் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் வாழும் Mbah Gotho 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்ததாகவும் இதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஆஸ்திரேலியா ஒரு தேசமாக உருவாகுவதற்கு முன்பே இவர் பிறந்திருக்கிறார்.

தற்போது 145 வயதாகும் Mbah Gotho, நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளைகளும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் மட்டுமே உள்ளனர்.

நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான காரணத்தை  Mbah Gothoவிடம் கேட்டபோது, நான் எதற்கும் அவசரப்பட மாட்டேன். மிகவும் நிதானமானவன் என பதிலளித்துள்ளார்.

Mbah Gothoவின் பிறப்புச் சான்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் உலகில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையை அவர் பெறுவார். ஆனால் இதை அவர் கொண்டாட விரும்பவில்லை “நான் மரணிக்கவே விரும்புகிறேன்” என்று கூறுகிறார்.

screen_shot_2016-09-01_at_3.55.22_pm

Related posts: