இரு கடல் சரணாலயங்களை உருவாக்க முயற்சி!

Monday, October 17th, 2016

அண்டார்டிகாவை சுற்றி இரண்டு பெரிய கடல் சரணாலயங்களை உருவாக்க டாஸ்மேனியாவில் 25 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள்  ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோபார்டிலுள்ள அண்டார்டிகா கடல் உயிரினப் பாதுகாப்பு ஆதாரங்களின் ஆணையத்தில் இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த கூட்டம், அண்டார்டிகாவின் கிழக்கில் ரோஸ் கடலில் பாதுகாப்பான கடல் சரணாலய மண்டலங்களை அமைப்பதற்கு ஒருமித்தக் கருத்தை உருவாக்க 25 நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் ஒன்றாக கூட்டியுள்ளது.

ஆனால், இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துகின்ற ரஷ்யாவும் , சீனாவும்,இதற்கு விருப்பம் இல்லாமல் மெதுவாக செயல்படுவதாக இதற்கு ஆதரவானோர் தெரிவிக்கின்றனர்.சீல் மற்றும் பெரிய ஸ்க்விட் வகைள் உள்பட பத்தாயிரத்திற்கு மேலான தனி சிறப்பு மிக்க கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாக அண்டார்டிகா திகழ்கிறது.

கிரில் மீன்களை அவைகள் அழிந்துவிடாத அளவுக்குப் பிடிப்பதும் ஹோபர்ட் கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் விவாதிக்கப்படவுள்ளது.சிறிய ஓட்டு மீன்கள் அண்டார்டிகாவிலுள்ள பல விலங்குகளின் நிரந்தர உணவாகும்.ஆனால், மீன் உணவு வகைகளை தயாரிப்பதாற்காக இவை பிடிக்கப்பட்டு வருகின்றன.

_91949321_b3d14f55-724a-4a15-a943-3f97d1b00ca1

Related posts: