கூகுளின் புதிய வீடியோ செயலி ”Duo” விரைவில் அறிமுகம்!

Wednesday, August 17th, 2016

கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது. வீடியோ அழைப்பு உங்கள் செல்பேசிக்கு வரும்போதே அழைப்பவரின் காட்சியைக் காண முடியும்.

எனவே, அழைப்பை ஏற்பதா வேண்டாமா என நீங்கள் தீர்மானிக்கலாம். Duo வின் இந்த வசதிக்கு “நாக்-நாக்’ (Knock Knock) என்று பெயரிட்டுள்ளனர். அன்ட்ராய்ட் மற்றும் அப்பிளின் iOS செல்பேசிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

இதற்கென பிரத்தியேகக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டிய தொல்லை இருக்காது. செல்பேசி எண்ணுடனேயே இந்த சேவையில் இணையலாம்.

WiFi யிலும் செல்பேசியின் இணையத் தொடர்பிலும் தானாக மாறி மாறிச் செயற்படும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், அழைப்புத் துண்டிப்பு இல்லாமல் பேச முடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.இன்னும் ஒரு சில நாட்களில் Google Duo பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: