இரவில் வாகனங்களை நாய்கள் வேகமாக துரத்துவது ஏன்?

Wednesday, November 23rd, 2016

பொதுவாக அலுவலக வேலை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புபவர்களை மட்டும் நாய்கள் ஓன்றுகூடி துரத்தும். பெரும்பாலான நபர்களுக்கு இதில் அனுபவம் கூட இருக்கலாம், இதற்காக காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

நாய்கள் பொதுவாக நினைக்கும் உள்ளுணர்வுகள்
  • மனிதர்கள் தங்களுக்கு என்று தனி எல்லைகள் வைத்திருப்பதை போல நாய்களும் தங்களுக்கு என்று மரம், போஸ்ட் கம்பம், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது சிறுநீர் கழிப்பது போன்றவற்றை தனது எல்லையை குறித்து வைத்துக் கொள்கிறது.
  • நாய்கள் முன்னதாக குறித்து வைத்துள்ள தன்னுடைய எல்லைகளை தாண்டி, புதியதாக ஏதேனும் வாகனம் வந்து அதன் மீது வேறு நாயின் சிறுநீர் வாடைகள் தென்பட்டால், வேறு பகுதி நாய் தங்கள் பகுதிக்கும் நுழைவதாக நாய்கள் கருதுகின்றது.
  • நாய்களுக்கு பொதுவாக உள்ளுணர்வுகள் அதிகமாக உள்ளது. எனவே சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்லும் போது நாய்களின் உள்ளுணர்வுகள் மிக அதிகமாக தூண்டப்படுகிறது.
  • சாலையில் செல்லும் ஒருசில வாகனங்களால் விபத்து அல்லது வேறுவிதமான அபாயம் ஏற்பட அனுபவம் இருந்தால், நாய்கள் அந்த மாதிரியான வாகனங்களை துரத்துகிறது என்று ரிஷப் மஷும்தர் என்பவர் கூறியுள்ளார்.
நாய்கள் இரவில் செல்லும் வாகனங்களை துரத்துவதற்கு என்ன காரணம்?
  • இரவு நேரத்தில் வரும் வாகனத்தின் அதிக ஒளி (ஹெட்லைட்), அதிகமான சத்தம் ஆகியவற்றை எழுப்பிக் கொண்டு வேகமாக வருவதால், தெருக்களில் உள்ள நாய்கள் மோப்பம் பிடித்து யோசிக்காமல், உடனே அந்த வாகனத்தை துரத்துகிறது. இதற்கு அந்த வாகனத்தின் அதிவேக சத்தங்கள் காரணமாக அமைகிறது.
  • சாலையில் வரும் போது, ஒருசில வாகனங்களின் சைலன்சறை சிலர் மாற்றி அமைத்திருப்பதால், அதிக இரைச்சல் கொண்டிருக்கும். இதனால் நாய்கள் தங்களின் உள்ளுணர்வுகளின் மூலம் எதோ ஆபத்துக்கள் ஏற்பட போகிறது என்று நினைத்துக் கொண்டு அந்த வாகனங்களை துரத்துகின்றது.
  • ஒருசில மனிதர்களின் உடல் அசைவு மற்றும் அவர்களின் அச்சத்தை நாய்கள் உணர்ந்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது. எனவே மனிதர்கள் பயத்துடன் சாலையைக் கடந்தால், அவர்களின் பயந்த உணர்வுகளை வைத்து, தெருக்களில் இருக்கும் நாய்கள் அவர்களைத் துரத்துகின்றது.
  • 625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: