உயிரின் தோற்றம் பற்றி ஆராயும் நாசாவின் விசேட விண்கலம்!

Tuesday, August 23rd, 2016
உயிரின் தோற்றம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேடமான விண்கலமொன்றினை உருவாக்கும் முயற்சியில் நசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விண்கலமானது 2016 செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதியளவில் பெண்ணு எனப்படும் கிரகம் நோக்கி பயணிக்கவுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த விண்கலம் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதுடன், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இந்த விண்கலமானது ரோபோ தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்ணு கிரகத்தில் 2 ஆண்டுகள் நிலவரைபிடல் மற்றும் நிலஅளவை தகவல்களை சேகரித்த பின்னர் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு 2023 ஆம் ஆண்டளவில் இந்த விண்கலம் பூமியை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் பெண்ணு கிரகமானது எவ்வாறான கனிமங்கள் மற்றும் இரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு விஞ்ஞானிகள் ஆர்வம் செலுத்தியுள்ளதுடன் சுத்தமான நீருக்கு இணைவான இரசாயன மூலக்கூறுகள் காணப்படுகின்றதா என்பது குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts: