5G தொழில்நுட்ப துணைச் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் சாம்சுங்!

Saturday, April 6th, 2019

அதி வேகம் கொண்ட இணையத் தொழில்நுட்பமான 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

இத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இப்படியிருக்கையில் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிப்கள் மற்றும் மொடெம் என்பவற்றினை வடிவமைக்கும் பணியில் சாம்சுங் நிறுவனம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பு தொழில்நுட்ப யுகத்தினை ஆக்கிரமிக்கும் நோக்கில் சாம்சுங் நிறுவனம் இந்த அதிரடி திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதேவேளை இவ் வார ஆரம்பத்தில் கேலக்ஸி எஸ் 10 எனும் 5G கைப்பேசி தொடர்பான அறிவித்தலை சாம்சுங் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இதன்படி இன்றைய தினம் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: