யுரேனஸ் கிரகத்திலிருந்து வெளிவரும் பயங்கர மணம் !

Saturday, April 28th, 2018

யுரேனஸ் கிரகத்திலுள்ள முகில்களை ஆய்வுக்கு உட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவற்றிலிருந்து பயங்கர மணம் வெளியேறுவதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்த போது முகில்களில் காணப்படும் ஹைட்ரஜன் சல்பைட் வாயுவே காரணம் என உறுதிப்படுத்தியுள்ளனர். இவ் வாயுவானது அழுகிய முட்டையின் மணத்தை வெளிவிடக்கூடியது.

இதற்கு முன்னர் Voyager 2 தொலைகாட்டியின் ஊடாக யுரேனஸின் முகில் கூட்டத்தினை அவதானித்த வானியலாளர்கள் அங்கு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்கள் காணப்படுவதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

எனினும் குறித்த கிரகத்தில் காணப்படும் நீர், அமோனியா மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் என்பவற்றின் செறிவை அறிவது கடினமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொலைகாட்டியின் எல்லைக்கு அப்பாற்பட்ட தூரத்தில் இக் கிரகம் காணப்படுவதால் இவற்றின் செறிவினை துல்லியமாக அறிவதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: