புவியிடங்காட்டி செயற்கைகோளை சீனா வெற்றிக்கரமாக ஏவியது சீனா !

Thursday, June 25th, 2020

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய புவியிடங்காட்டி அமைப்பான பெய்டு (Beidou)-வின் கடைசி செயற்கைகோளையும் சீனா வெற்றிக்கரமாக ஏவியிருக்கிறது.

உலகின் பெரும்பாலான நாடுகள் புவியியல் இருப்பிடத்தை அறிந்து கொள்ள புவியிடங்காட்டிகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்த முயற்சியில் இறங்கி கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சீனா, இந்த தொழில்நுட்பத்தின் கடைசி செயற்கைகோளை நேற்று காலை விண்ணில் ஏவியது.

இனி சீனா புவியியல் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கு அமெரிக்காவின் ஜி.பி.எஸ் அமைப்பை சார்ந்திருக்கும் நிலை மாறியிருக்கிறது.

அமெரிக்காவுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பெய்டு தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: