ஹைதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 304 பேர் பலி!..

Sunday, August 15th, 2021

ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 304 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தோர் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது

000

Related posts:


சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள பாதாள உலகக் குழு இல்லாதொழிக்கப்படும் - பசில் ராஜபக்ச உறு...
US - AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபட...
கொவிட் தொடர்பான தவறான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூரியூப் தளத்திலிருந்து நீக்கம...