விண்வெளிக்கு மனிதனை அழைத்துச் செல்லும் சோதனை முயற்சி வெற்றி!

Tuesday, March 5th, 2019

அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 16 அடி உயரமுள்ள ராக்கெட்டில் மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலம் இணைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

பரிசோதனை முயற்சி என்பதால் இந்த விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ராக்கெட் கலத்தை வெற்றிகரமாக விண்வெளி ஆய்வகத்திற்கு கொண்டு சேர்ந்ததாகவும், இதனால் இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

Related posts: