EPF, ETF ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு!
Wednesday, October 4th, 2023
ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் முன்மொழிவுகளுக்கு இடமளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“EPF மற்றும் ETF நிதிகளை வெளிநாட்டில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டுமா என்பது குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டும். அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எவ்வாறாயினும், இவ்விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயாராக உள்ளோம்.
EPF தற்போது மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ETF தொழிலாளர் கையாளப்படுகிறது“ என்றும் ஜனாதிபதி கூறினார்.
சுதந்திரமான அமைப்பொன்றை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் குறித்து விவாதித்து எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


