துறைமுக நகர சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் –. கடல்சார் பொருளாதாரத்தை உருவாக்குவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, March 5th, 2024

துறைமுக நகர சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு கடல்சார் பொருளாதாரத்தை உருவாக்குவதே நோக்கம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கரையோரப் பொருளாதாரம் உருவாக்கப்படும்போது இலங்கையின் சட்டத்தால் அந்தச் செயற்பாடுகளைச் செய்ய முடியாது. ஒற்றைப் பொருளாதார கட்டுப்பாட்டு எல்லையில் பிரித்தானிய  வணிகச் சட்டங்கள்  செயற்படுத்தப்படுகிறன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டத்தரணிகள் குழுவொன்று இருக்க வேண்டும். உலகம் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஏனென்றால் உலகத்திற்கு நமது சட்டங்கள் தெரியாது. நாட்டை அபிவிருத்தி செய்ய, நாம் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும்.

இளம் சட்ட வல்லுநர்களுடன் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற “வட்ஸ் நியூ” எனும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றி வருகிறோம். அனைத்து அரசுகூட்டுத்தாபனங்களும்  கம்பனிகளாக மாற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் ஒரு பிரதான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

புதிய பொது நிதி மேலாண்மை சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், பொதுக்கடன் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும், விவசாய நவீனமயமாக்கல் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த இலக்குகளை அடைய பொருளாதார மாற்றம் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தற்போதைய முதலீட்டுச் சபைக்குப் பதிலாக பொருளாதாரக் குழுவை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கம்பனிச் சட்டத்தில் பணிப்பாளர்களுக்கு உள்ள அதிகாரம் இவர்களுக்கும் கிடைக்கும். மேலும் அரச – தனியார் கூட்டுமுயற்சி தொடர்பிலும் சட்டம் கொண்டுவரப்படும்.

மேலும், முதலீட்டு சபையின் கீழ் உள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் வர்த்தக வலயங்கள் இதன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

தேசிய  உற்பத்தி ஆணைக்குழுவொன்று  உருவாக்கப்படும். நமது தயாரிப்புகளை அதிகரிக்காவிட்டால், உலகத்துடன் போட்டியிட முடியாது. மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் நிறுவப்பட்டது. இவை தனித்தனி வரைவுகளாக அளிக்கப்பட்டால், உயர் நீதிமன்றம் அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும். இதை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சுற்றுலாத் துறையில் புதிய சட்டம் கொண்டு வருவதோடு, அரசு சொத்துக்களையும் ஒப்படைத்தல், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டம், புதிய சுற்றுச்சூழல் சட்டம், சிங்கராஜா, சிவனொளிபாத மலை, ஹோர்டன் சமவெளி, வஸ்கமுவ வனப் பூங்காக்களின் பாதுகாப்பிற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும். மேலும், வர்த்தகத் திணைக்களம் நீக்கப்பட்டு, புதிய சர்வதேச வர்த்தக மையங்கள் நிறுவப்பட்டு, வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பணிகள் செயல்படுத்தப்படும்.

இதேவேளை கல்வித்துறையில் சில புதிய சட்டங்களைக் கொண்டுவர உள்ளோம். தொழிற்கல்வியை ஒரு அதிகார சபையின் கீழ் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் 1944 இல் கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டமே உள்ளது. அந்த நேரத்தில் நாங்கள் யாரும் பிறக்கவில்லை. எனவே, இந்த முறையை புதிய சட்டங்கள் மூலம் மாற்ற வேண்டும். நாம் ஒரு புதிய சமூகத்திற்கு, புதிய பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும். மீண்டும் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படாத, சிறந்த நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும். எமது இந்தச் செயற்பாடுகளுக்கு ஏற்ப தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: