பருத்தித்துறை சாலையின் பேருந்து சேவை கட்டைக்காட்டுடன் நிறுத்தப்படுவது ஏன்? – ஈ.பி.டி.பியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை செபஸ்தியன் கேள்வி!

Tuesday, July 24th, 2018

பருத்தித்துறை போக்குவத்து சாலையினால் பருத்தித்துறை – கேவில் இடையேயான போக்குவரத்து சேவை கட்டைக்காட்டுடன் இடைநிறுத்தப்படுகின்றதால் குறித்த பகுதிக்குச் செல்லும் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு குறித்த பேருந்து கேவில் வரை சேவையில் ஈடுபடாது கட்டைக்காட்டுடன் நிறுத்தப்படுவது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை செபஸ்தியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத் தொடர் இன்றையதினம் சபைத் தவிசாளர் ச.அரியகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதேச தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான 755 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்கள் பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 8.00 மணிக்கு கட்டைக்காடு ஊடாக கேவில்வரை சேவையில் ஈடுபடுவதே வழமை. ஆனால் குறித்த சேவையின் கடைசி சேவை  கட்டைக்காட்டுடன் நிறுத்தப்பட்டு மீண்டும் அங்கிருந்து அதிகாலை 5.30க்கு பருத்தித்துறை நோக்கி புறப்படுகின்றது.

இதனால் நித்திய வெட்டை, வண்ணாங்குளம் ,வேதக்குளம் ஆகிய மூன்று கிராமங்களை தாண்டி கேவில் கிராமத்துக்கு காலை மற்றும் மாலைக்குமான குறித்த வழித்தட பஸ் சேவை இன்றி மக்கள் மாணவர்கள் என பலர் நாளாந்தம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்

இதேவேளை கட்டைக்காடு பருத்தித்துறை 755 இலக்க வழித்தடத்தில் ஈடுபடுத்தப்படும் தனியார் பேருந்துகளும் ஆளியவளை – பருத்தித்துறை என்ற தேசிய போக்குவரத்து ஆணையகத்தின் அனுமதியின் பெயரிலேயே சேவையிலீடுபடுவதாக அறியமுடிகிறது.

எனவே மேற்படி ஆணையகத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு கேவில் – பருத்தித்துறை என்ற பெயரின் கீழ் அனுமதிபெற்று சேவையிலீடுபடுவதற்கு  இச்சபையானது ஆவன செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் - A/L மற்றும் புல...
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது - பாதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் ...
தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் - இரண்டு வாரங்களில் அமைச்சரவை அ...