8 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய படை வசமானது!

Thursday, November 10th, 2022

சுமார் 3 மாதங்களாக மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த இலங்கையர்கள் தொடர்பில்,எமது செய்திப்பிரிவு முன்னதாக பல உண்மைகளை வெளிப்படுத்தியதுடன், நைஜீரிய தூதரக அதிகாரிகளின் கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கப்பலில் இருந்த மாலுமி ஹர்ஷ டி சில்வா, எமது செய்திப் பிரிவுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தாம் உட்பட அதிலிருந்த இலங்கையர்களைக் காப்பாற்ற ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளின் தலையீடுகளை கோரினார்.

இந்த கப்பல் ஆகஸ்ட் 12 அன்று ஈக்குவடோரியல் கினியா கடல் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச கடல் பகுதியில் வைத்து தமது பொறுப்பில் எடுக்கப்பட்டது.

பின்னர், அங்குள்ள துறைமுகம் ஒன்றில் சுமார் 3 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பணம் செலுத்திய பின்னரே கப்பலை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தமது கப்பல் நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் மீண்டும் கைப்பற்றப்படவுள்ளதால், இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டை கப்பலில் இருந்த இலங்கையர்கள் கோரியிருந்தனர்.

கப்பலில் 16 இந்தியர்கள், 8 இலங்கையர்கள், ஒரு போலந்து நாட்டவர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் என மொத்தம் 26 பணியாளர்கள் உள்மை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: