70 வீத பால்மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை!
Thursday, July 22nd, 2021
70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் வணிக வங்கிகளில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், பால்மா விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
உலக சந்தையில் பால்மா வகைகளின் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் அதிகரிப்பு, டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி என்பன காரணமாக பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. இதேநேரம் நாட்டில் நாள் ஒன்றில் 200 மெற்றிக் டன் பால்மா பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
சோமவங்ச அமரசிங்க காலாமானார்!
தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை - அமைச்சர் பந்துல குணவர்தன!
தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் - ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு!
|
|
|


